உலகம்செய்திகள்

12 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது : பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

அமெரிக்காவின் மியாமி பகுதியில் இடிந்து விழுந்த 12 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து 102 இற்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் ஒருவர் பலியானதுடன், பலர் காணாமல் போய் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணியில் பொலிஸார், தீயணைப்பு துறையினர் மற்றும் பல்வேறு மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button