வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம்- மாதம்பை அருள்மிகு முருகப் பெருமான் திருக்கோயில்
வழித்துணையாயிருந் தெமக்கு வழிகாட்டும் பெருமானே
வளமான பெருவாழ்வை எமக்களிக்க எழுந்தருள்வாய்
வற்றாத கருணையினைத் தந்தெம்மை வாழவைப்பாய்
மாதம்பை கோயில் கொண்ட திருமுருகா துணையிருப்பாய்
பெருந்தெருவின் அருகினிலே எழுந்தருளும் பெருமானே
பெருமைமிகு பெருவாழ்வைத் தந்தருள எழுந்தருள்வாய்
என்றும் அருகிருந்து காப்பு தந்து வாழவைப்பாய்
மாதம்பை கோயில் கொண்ட திருமுருகா துணையிருப்பாய்
வெற்றிவேல் தாங்கி நின்று காட்சி தரும் பெருமானே
வெற்றிமிகு பெருவாழ்வை எமக்களிக்க எழுந்தருள்வாய்
ஆற்றல் தந்து ஆதரித்து என்றும் எம்மை வாழ வைப்பாய்
மாதம்பை கோயில் கொண்ட திருமுருகா துணையிருப்பாய்
பார்வதியின் இளமகனாய் வந்துதித்த பெருமானே
பாவமற்ற பெருவாழ்வை எமக்களிக்க எழுந்தருள்வாய்
புண்ணியராய் நாம் வாழ வழிகாட்டி வாழவைப்பாய்
மாதம்பை கோயில் கொண்ட திருமுருகா துணையிருப்பாய்
வள்ளி தெய்வானையரை உடன் கொண்ட பெருமானே
வாழ்க்கையில் மேன்மையினை எமக்கருள வந்தருள்வாய்
வல்லமை தந்தெமக்கு வழி காட்டி வாழவைப்பாய்
மாதம்பை கோயில் கொண்ட திருமுருகா துணையிருப்பாய்
புத்தள மாவட்டத்தில் வந்தமர்ந்த பெருமானே
புத்துணர்வு தந்தெம்மை உயர்ச்சிதர எழுந்தருள்வாய்
நல்லுணர்வு தந்தெமக்கு வழிகாட்டி வாழவைப்பாய்
மாதம்பை கோயில் கொண்ட திருமுருகா துணையிருப்பாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர், அகில இலங்கை இந்துமாமன்றம்.