இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இந்து சமய நிகழ்வு இன்று (03) காலை பதுளை பிராந்திய பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்ல தலைமையில் பசறை ஸ்ரீ கதிரவேலாயுதம் ஸ்வாமி ஆலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பசறை, நமுனுகுல மற்றும் ஹிகுருகடுவ பொலிஸ் நிலையங்களின் பொறுப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் சேவையில் ஓய்வு பெற்ற அதிகாரிகள்
பசறை வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ராமு தனராஜா