(செய்தி – பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)
அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா புரன்வீக் ராணிதோட்டத்தை சேர்ந்த கிருஸ்ணகுமார் பாக்கியலெட்சுமி என்ற பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் இந்த மூன்று பெண் குழந்தைகளும் பிறந்துள்ளதாக
வைத்தியசாலையிகன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
32 வயதுடைய கிருஸ்ணகுமார் பாக்கியலெட்சுமி என்ற இந்த பெண்ணுக்கு இதற்கு முன்பு பத்து மற்றும் எட்டு வயதினை கொண்ட இரண்டு ஆண்குழந்தைகள் உள்ளமை குறிப்பிடதக்கது.
கிருஸ்ணகுமார் பாக்கியலெட்சுமி என்ற இந்த பெண்ணின் கணவர் மாத்திரம் தோட்ட தொழில் செய்து வருகின்ற நிலையில் தனது கணவரின் உழைப்பில் வரும் வருமானத்தை வைத்து கொண்டு தான் வாழ்ககை நடத்த வேண்டும் ஒரே தடவையில் மூன்று குழந்தைகளுக்கும் தாய்பால் ஊட்டுவது என்பது கஷ்டமான விடயம்.பொருளாதார நெருக்கடியால் உதவக்கூடியவர்களிடம் இந்த பெண் உதவி கோரிக்கையும் விடுத்துள்ளார்.