LPL போட்டியை இலவசமாக பார்ப்பதற்கு, பார்வையாளர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைவாக (21) ஆரம்பமான லங்கா பிரீமியர் தொடரின் இறுதிப் போட்டி வரையில் போட்டியை பார்வையிடுவதற்கு பார்வையாளர்களுக்கு சந்தர்ப்பம் உண்டு.
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் சி மற்றும் டி பார்வையாளர் அரங்கின் கீழ் பிரிவில் இருந்து போட்டியை பார்வையிடுவதற்கு பார்வையாளர்களுக்கு இதற்கமைவாக சந்தர்ப்பம் உண்டு.
கடந்த 11 நாட்களாக நடைபெற்ற தொடரின் 20 போட்டிகளுக்கு பின்னர் ,பிரீமியர் தொடரின் இறுதி சுற்றுக்கு கண்டி பெல்கன்ஸ், ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
போட்டி தொடரின் இறுதி சுற்று தொடரின் முதல் போட்டி (21) நடைபெற்றது.
இதில் ஜப்னா கிங்ஸ் மற்றும் கண்டி பெல்கன்ஸ் அணிகள் மோதின. .