இயற்கையை நேசித்து மரங்களை நடுவதன் மூலம் வெப்பத்தை தணிப்போம்.
புனித ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி குழு வங்காலை சுவிஸ் அமைப்பினரின் வேண்டுகோளுக்கு அமைவாக GREEN LAYER Environmental Organization அமைப்பினரின் செயற்திட்டத்தில் ஒன்றான மன்னார் மாவட்டத்தில் 5000 புங்கை மரங்களை நடும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 200 புங்கை மரக்கன்றுகளை வியாழக்கிழமை 07.09.2023 காலை வங்காலை கிராமத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் மரக்கன்றுகளை எமது அமைப்பினரின் தீர்மானத்திற்கு அமைவாக
👉 வங்காலை வைத்தியசாலை வளாகம்.
👉 வங்காலை அடைக்கலமாதா சிற்றாலய வளாகம்
👉 புனித ஆனாள் ஆரம்ப பாடசாலை வளாகம்
👉 சிறுநாவற்குள வீதி மற்றும் புனித அந்தோனியார் சிற்றாலய வளாகம்.
👉 பாடசாலையின் புதிய விளையாட்டு மைதான வளாகம்
👉 தோமஸ்புரி வீதி ஓரம் மற்றும் பொது இடங்களில் நடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எமது அமைப்பினர் உரிய நிர்வாகத்திடம் கலந்துரையாடி நிகழ்வினை ஒழுங்கு செய்து கையளிப்பதற்காக இருக்கின்றார்கள். எனவே அன்பான கிராம வாழ் மக்களே தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை மாற்றங்களை கருத்தில் கொண்டும் வெப்பத்தின் கோரப்பிடியில் இருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எம்மை பாதுகாத்துக்கொள்ள இயற்கையை நேசித்து மரங்களை நடுவதன் மூலம் வெப்பத்தை தணிப்போம். என்னும் செயற்திட்டத்திற்கு உங்கள் ஒவ்வொருவரினதும் ஒத்துழைப்பினை நாடி நிற்கின்றோம்.
நன்றி
தகவல்
புனித ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி குழு வங்காலை சுவிஸ்.