...
செய்திகள்

13 பேரை உள்ளடக்கிய விசேட ஜனாதிபதி செயலணியில் தமிழ் அங்கத்துவம் இல்லை -வடிவேல் சுரேஷ்

அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரிமையின் பிரகாரம் ஐனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இலங்கையினுள் “ஒரே நாடு – ஒரே சட்டம்” என்பதை செயற்படுத்தும் சட்ட வரைபை தயாரிக்க பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கடகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில்  13 பேரை உள்ளடக்கிய விசேட ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது என்பது கேலிக்கூத்தாகவே உள்ளது என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள குழு முரண்பாடாக உள்ளது எனவும் தற்போதுள்ள சட்டத்தை சரியாக செயல்படுத்த முடியாமல் உள்ளது என்றுதான் புதிய ஒரு குழுவை அமைக்க வேண்டிய கட்டாயம் நிலவியது.ஆனாலும் தற்போது  அமைக்கப்பட்டுள்ள குழுவின்   நோக்கம்  என்னவாக இருக்கப்போகின்றது?
எது எவ்வாறு இருப்பினும் இச் செயலணியில் தமிழ் அங்கத்துவம் இல்லை என்பது மிகவும் கண்டனத்துக்குறிய விடயமாகும்.எனவும் வடிவேல் சுரேஷ் எம்.பி தெரிவித்திருந்தார்.

தகவல் .

Related Articles

Back to top button


Thubinail image
Screen