ஹல்துமுல்லை பம்பரகந்த யலதென்ன நீர்வீழ்ச்சிப் பகுதியின் காட்டுப்பகுதியில் 02 நாட்களாக காணாமல் போயிருந்த தம்பதி நேற்று (11) பிற்பகல் ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தின் மூலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காட்டுப்பகுதியில் காணாமல் போயிருந்த நிலையில், கருவலகஸ்வெவ நெலும்வெவ நவோத்யா மதுரங்க (24) மற்றும் தம்புத்தேகம செவ்வந்தி சந்திபனி (22) ஆகிய புதுமணத் தம்பதிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நவோத்யா மதுரங்க, எங்களுக்கு திருமணமாகி மூன்று மாதங்களே ஆகிறது. கடந்த 8 திகதி தான் வீட்டிலிருந்து வந்து பாஓரகண்ட் வாங்கெடிகல பகுதியில் முகாமிட்டிருந்தோம்.அந்த பகுதியில் இடம் விட்டு இடம் பெயர்ந்து கொண்டிருந்தோம். .பின்னர், காட்டில் எந்தப் பாதையில் செல்வது என்று கண்டுபிடிக்க முடியாததால், நாங்கள் இருக்கும் இடத்தை எங்கள் சிறிய அம்மாவுக்கு ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தை அனுப்பி வைத்தோம்
நாங்கள் அங்கு இருக்கும் போது எங்களின் போன்களின் பேட்டரிகளும் செயலிழந்து போனது.அங்கிருந்த போதுதான் பொலிஸார் எங்களை தேடி வந்தனர்.அப்போது தான் தெரிந்தது எங்கள் சிறிய அம்மா நாங்கள் அனுப்பிய ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தை ஹல்துமுல்ல பொலிஸாருக்கு அனுப்பி அவர்கள் அதன் மூலம் எங்களை கண்டுபிடித்தனர்
இரு இரவுகளையும் இருளில் கழித்த எங்களை காப்பாற்றிய ஹல்துமுல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு தாம் பல தடவை நன்றி தெரிவிப்பதாகவும் மதுரங்க மேலும் தெரிவித்தார்.
ராமு தனராஜா