இன்று பசறை பகுதியில் பெய்த கடும் மழையின் காரணமாக பசறையில் இருந்து மடுல்சிமை மற்றும் பிட்டமாறுவ எக்கிரிய ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வீதியில் பசறை பொது மயானத்திற்கு அருகாமையில் பாரிய மண்மேட்டுடன் மரம் ஒன்று வீதியில் வீழ்ந்துள்ளமையால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இதனால் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளமையினால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் அசௌசரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
ராமு தனராஜா