ம.மா/நு/பாரதி மகா வித்தியாலய பாடசாலையின் 2023 ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்ற தேர்தல் சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு 27.09.2023 புதன்கிழமை நடைப்பெற்றது.
இந்த தேர்தலில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டதுடன் வேட்பாளர்களுக்கு கணிசமான வாக்குகளையும் வழங்கி இருந்தனர் .
பிற்பகல் 01.00 மணியளவில் தேர்தல் ஆரம்பமாகி 02.30 மணியளவில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
வெற்றிப்பெற்ற கட்சிகளின் பெயர்களும் வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளும் பாடசாலை தேர்தல் ஆணையாளரால் எதிர்வரும் திங்கட்கிழமை 2023.10.02ம் திகதி அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.