நு /தங்கக்கலை இலக்கம் மூன்று தமிழ் வித்தியாலயத்தின் ஒளிவிழாவும், பிரியாவிடை நிகழ்வும் இன்று(23/12/22) இடம்பெற்றது.
பாடசாலைகளில் நடத்தப்படுகின்ற ஒளிவிழாவும் அதே போல கல்வித்துறையில் இதுவரை காலம் பணியாற்றி ஓய்வுபெறவுள்ள கல்வியியலாளர்களுக்கான பிரியாவிடையும் பாடசாலை அதிபர் நோன்மதிதேவி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் கல்வித்துறையில் மிக நீண்ட காலமாக பல்வேறு சேவைகளை புரிந்த ஆரம்பக்கல்விக்கு பொறுப்பான கல்வி பணிப்பாளர் செல்வராஜ் ஐயா அவர்களும், அதே போல கோட்டம் 3 மெராயா தேசிய பாடசாலை அதிபர் முத்துகுமார் ஐயா ஆகிய இருவரும் நிகழ்வில் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பித்ததுடன் இவர்கள் இருவரும் இப்பிரதேச கல்வி செயற்பாடுகளில் இதுவரைகாலம் சேவையாற்றி ஓய்வு பெறவுள்ள நிலையில் பாடசாலை அதிபர் தலைமையில் இவர்கள் இருவரும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களது பல்வேறுப்பட்ட கலைநிகழ்வுகளும் அதே போல மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்ப்பட்டது. நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , பெற்றோர்கள், பாடசாலை பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் கலந்துக்கொண்டனர்.
சரத்