மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் பகுதியில் லொறி ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று (03) இரவு 9.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
மஸ்கெலியா நிரூபர் செ.தி.பெருமாள்.04.10.2023.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள பிரவுன்ஸ்விக் தோட்ட புளும்பீல்ட் பகுதியில் இருந்து காசல்றி பகுதிக்கு மரண வீடொன்றுக்கு சென்று திரும்பும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்று இருப்பதாக மஸ்கெலியா போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.
விபத்தில் சாரதி உட்பட 22 பேர் பாதிக்கப்பட்டதோடு சாரதி மற்றும் பாதிக்கப்பட்ட மேலும் 17 பேர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இவர்களில் மூவர் அதிக அளவில் காயங்கள் ஏற்பட்டு நாவலப்பிட்டி ஆதார வைத்திய சாலைக்கும் கன்டி போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிர் சேதம் இல்லை எனவும் விபத்துக்கான காரணங்கள் இது வரையில் கண்டறியப் படவில்லை எனவும் மேலதிக விசாரனைகளை மஸ்கெலியா பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
இவர்களில் சிறு காயங்களுடன் ஒரு ஆண் நான்கு பெண்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மஸ்கெலியா வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி எச்.ஜ.இர்ஜாட் கூறினார்.