மாத்தளை பகுதியிலுள்ள மகளிர் பாடசாலையொன்றில் 40 மாணவிகள் சுவாசக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகளுக்கு காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.