செய்திகள்

142 இலங்கையர்கள் கொரோனாவுக்குப் பலி.!

வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்ற 142 இலங்கையர்கள் கொவிட்-19 வைரஸால் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதுவரை, 4800 இற்கும் அதிகமான இலங்கைத் தொழிலாளர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன் அவர்களில் 4,600 பேர் குணமடைந்துள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய குறிப்பிட்டார்.

மத்தியகிழக்கு நாடுகள் உட்பட 16 நாடுகளில் இந்த உயிரிழப்புகளும் தொற்றுகளும் பதிவாகியுள்ளதாகவும், இவர்கள் அனைவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து விட்டு தொழிலுக்குச் சென்றவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button