வடமாகாணம்- முல்லைத்தீவு மாவட்டம்- முல்லைத்தீவு வற்றாப்பளை – அருள்மிகு கண்ணகி அம்மன் திருக்கோயில்
வளம் சூழ்ந்த மருதநிலச் சூழலிலே வந்தமர்ந்த தாயே
வற்றாத கருணையினைப் பொழிந் தருள்வாய் அம்மா
வீரத்திருமகளே, வெற்றிகள் தந்திடம்மா
வற்றாப்பளை இருந்தருளும் கண்ணகி அம்மா காப்பளிப்பாய்
வன்னிப் பெருநிலத்தில் வந்தமர்ந்த தாயே
வளம் பொழியும் வாழ்வினையே தந்தருள்வாய் அம்மா
வெற்றித்திருமகளே வலிமை தந்திடம்மா
வற்றாப்பளை இருந்தருளும் கண்ணகி அம்மா காப்பளிப்பாய்
தமிழ் ஒலிக்கும் திருநாட்டில் காட்சி தரும் தாயே
தவறில்லா நல்வாழ்வை வழங்கிடுவாய் அம்மா
கற்பின் தீச்சுடரே கவலைகளைப் போக்கிடம்மா
வற்றாப்பளை இருந்தருளும் கண்ணகி அம்மா காப்பளிப்பாய்
வளம் நிறைந்த மாநிலத்தில் இருந்தருளும் தாயே
மலைப்பில்லா நிலை வாழ்வை வழங்கிடுவாய் அம்மா
தமிழ்க் குலத்தின் ஒளிவிளக்கே தவறுகளைத் தடுத்திடம்மா
வற்றாப்பளை இருந்தருளும் கண்ணகி அம்மா காப்பளிப்பாய்
கடல் நீரில் ஒளிகாட்டும் சிறப்பு கொண்ட தாயே
செல்லும் வழி சிறப்படைய ஆற்றலைத் தந்திடுவாய் அம்மா
சித்தத்திலுறைந்திருந்து சீர்வாழ்வை நிலைக்கச் செய்திடம்மா
வற்றாப்பளை இருந்தருளும் கண்ணகி அம்மா காப்பளிப்பாய்
வட இலங்கை வாழ வளமளிக்கும் எம்தாயே
வருத்தமின்றி நாம் வாழும் நிலைமை தந்திடுவாய் அம்மா
என்றும் உடனிருந்து எம் நலனை உறுதி செய்திடம்மா
வற்றாப்பளை இருந்தருளும் கண்ணகி அம்மா காப்பளிப்பாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.