அவிஸ்ஸாவளை சேர்ந்த எழுத்தாளர் பிரதீபா சிவக்குமாரின் முதலாவது கவிதை தொகுப்பு கொழும்பில் வேளியிடப்பட்டது.
குறித்த நிகழ்வானது கடந்த 2022/12/ 23 அன்று கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள ருஷா வரவேற்பு மண்டபத்தில் மாலை 5:30 மணிக்கு நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் காயத்ரி விக்கிரமசிங்க மற்றும்
இளமை எப் எம் முகாமையாளர் மிருணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நூல் அறிமுக உரையினை எழுத்தாளர்,அதிபர் வி எம் ரமேஸ் வழங்கிவைக்க , நூல் மதிப்புரையினை எழுத்தாளர் ப.கனகேஸ்வரன் வழங்கினார்.
நிகழ்வில் இளம் எழுத்தாளர்கள் ,ஊடகவியாளர்கள் சமூகசெயல்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நன்றியுரையினை குறித்த நூலின் நூலாசிரியர் பிரதீபா சிவகுமாரன் வழங்கிவைத்தார்.
குறித்த படைப்பு தொடர்பாகவும் நுலாசிரியரையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.