தேசிய கலை இலக்கியப் பேரவையின் 50-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கொட்டகலை இல. 01. புகையிரத நிலைய வீதியில் தேசியக் கலை இலக்கியப் பேரவையின் அலுவலகம்( 24/12/22 ) திறந்து வைக்கப்பட்டது.
தேசிய கலை இலக்கிய பேரவை கடந்த 50 ஆண்டு காலத்தில் சகல விதமான ஒடுக்கு முறைகளுக்கும் எதிராக, உழைக்கும் மக்களின் குரலாக எந்தவித சமரசங்களுக்கும் அப்பாற்பட்டு கலை இலக்கிய பணிகளை ஆற்றி வருகிறது.
அலுவலக திறப்பு விழா நிகழ்வில் மலையகத்தின் மூத்த கலை இலக்கியவாதிகளும் , இளையவர்களும் கலந்து கொண்டனர்.