உலகம்

15 நாள் சிகிச்சை பலனற்று போனது – அருண் ஜெட்லி திடீர் மரணம்.

சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக கடந்த 9 ஆம் திகதி இரவு டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் ஜெட்லி சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.

கடந்த 15 நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்த 66 வயதான அருண் ஜெட்லி சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 12.07 மணிக்கு உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான அருண் ஜெட்லி பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மிக முக்கியமான பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் மறைவுக்கு இந்தியாவிற்கான சீன தூதுவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமது மதிப்பு மிக்க நண்பரை இழந்து விட்டதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் வெளியிட்டுள்ளார்.

சிக்கலான நேரங்களில் முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு கட்சி அவரை நம்பியிருந்ததாக பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் எல் கே அத்வானி தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அரசியல் பிரமுகர்கள் பலரும் அன்னாரின் மறைவுக்கு தமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Back to top button