செய்திகள்

15 வயது இரட்டைச் சிறுமிகள் காதலர்களால் துஷ்ப்பிரயோகம்

 

தங்களுடைய காதலர்களைக் காண வந்த 15 வயதுக்குட்பட்ட காணாமல்போன இரட்டைச் சிறுமிகள் கொழும்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இவ் இரட்டைச் சிறுமிகள் வெரலுகசின்ற நாவலப்பிட்டியில் இருந்து நவம்பர் 11 ஆம் திகதி காணமல் போய் இருந்தனர்.இவர்கள் காணாமல் போனதையிட்டு இவ் சிறுமிகளின் பெற்றோர் நாவலப்பிட்டி போலிசில் நவம்பர் 14 ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ் இரட்டைச் சிறுமிகள் நாவலப்பிட்டியில் இருந்து கொழும்பிற்கு தமது காதலர்களை காணும் பொருட்டு வந்துள்ளனர். பின்னர் இவ் இரட்டைச் சிறுமிகள் தமது காதலர்களுடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.
சிகிரியாவில் லொஜ் ஒன்றில் தங்கியிருந்த வேளை இவ் இரு இரட்டைச் சிறுமிகளும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளனர். பின்னர் இவ் இரட்டை சிறுமிகளும் தமது காதலர்களால் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்தில் அனாதரவாக கைவிடப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதாக புகையிரத நிலைய பாதுகாப்பு அதிகாரிகளினால் கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் இவ் இரட்டைச் சிறுமிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் நாவலப்பிடி பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட இவ் இரட்டைச் சிறுமிகள் தொடர்பாக பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button