செய்திகள்

15 வயது சிறுமியை இணையத்தில் விளம்பரம் செய்த இணையத்தின் உரிமையாளர் கைது.!

கல்கிசையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்த மேலும் ஒரு இணைத்தளத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பத்தரமுல்ல பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது வரை மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் 4 இணையதளங்கள் ஊடாக குறித்த சிறுமி விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இதுவரை இரண்டு இணையதளங்களின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Related Articles

Back to top button