செய்திகள்

15 வயது சிறுமியை தொடர்ந்து 13 வயது சிறுமி 10க்கும் மேற்பட்டவர்களால் துஷ்பிரயோகம்

கல்கிசையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த சிறுமியை பாலியல் தேவைக்காக பயன்படுத்திய 41 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று மற்றுமொரு சம்பவம் நேற்று முன்தினம் பதிவாகியுள்ளது. நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சிறுமியின் தந்தை உட்பட நால்வர் நீண்டகாலமாக சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தியுள்ளனர். சந்தேகநபர்களும், மற்றுமொரு பெண்ணும் கைது செய்யப்பட்டு நாவலப்பிட்டிய நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 6 பேர் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாடு பூராகவும் உள்ள பொலிஸ் நிலையங்களில் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரால் விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். கிராமிய மற்றும் பாடசாலை மட்டத்தில் செயலமர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குற்றம் நடைபெறும் முன்னர் தடுப்பதே இதன் நோக்கமாகும்.

Related Articles

Back to top button