யாழ் மாவட்டம் தென்மராட்சி மந்துவில் வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த கணேசபாலேந்திரன் கதிர்ச்செல்வன் இன்று யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி திரு சூசைதாசன் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
இவர் ஆரம்ப கல்வியை யா/மந்துவில் சிறிபாரதி வித்தியாலயம் மற்றும்இலுப்பைக்கடவை அ.த.க பாடசாலையிலும் உயர் கல்வியை மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியிலும் கல்விபயின்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவபீடத்தில் பட்டப்படிப்பையும் நிறைவு செய்துயாழ் மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணிபுரிந்துவருகிறார்.