செய்திகள்

16 அரசியல் கைதிகள் உட்பட 93 கைதிகள் விடுதலை

பொசன் போயாவை முன்னிட்டு பல வருடங்களாக சிறையிலிருக்கும் 16 அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சிறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டவர்களில் 77 பேர் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, இன்றைய தினம் 93 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button