...
விளையாட்டு

16 ஆவது பரா ஒலிம்பிக்கில் சீனா முதலிடம்.

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் நேற்றுடன் நிறைவடைந்த ‍16 ஆவது பரா ஒலிம்பிக்கில் 96 தங்கம், 60 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தமாக 207 பதக்கங்களை வென்ற சீனா முதலிடத்தை தன்வசப்படுத்தியது.

41 தங்கம், 38 ‍வெள்ளி, 45 வெண்கலம் வென்ற பிரித்தானியா இரண்டாவது இடத்தையும், 37 தங்கம், 36 வெள்ளி, 31 வெண்கலம் வென்ற அமெரிக்கா மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

வரவேற்பு நாடான ஜப்பான் 13 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தமாக 51 பதக்கங்களுடன் 11 ஆவது இடத்தை பிடித்தது.

2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் டோக்கியோ பரா ஒலிம்பிக் கொரோனா வைரஸ் பாதிப்பால், 2021 ஆம் ஆண்டுக்கு பிற்போடப்பட்டன. பெரும் சிரமத்தின் மத்தியில் டோக்கியோ ஒலிம்பிக்கு போட்டியாகட்டும், டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டியாகட்டும் இந்த இரண்டு போட்டிகளையும் வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு ஐப்பான் ஒலிம்பிக் குழு, ஜப்பான் பராலிம்பிக் குழு ஆகிய இரண்டுமே கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டன.

Related Articles

Back to top button


Thubinail image
Screen