இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரையில் 13,300 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, காசாவில் ஹமாஸின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அவர்களில் 5,600 பேர் சிறுவர்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை இலக்கு வைத்து தொடர்ந்தும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.