இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி வீதங்களை குறைத்துள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை மீளாய்வு கூட்டத்தின் போது, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய துணைநில் வைப்பு வசதி வீதம் 9 சதவீதமாக 100 அடிப்படை புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளது.
இது முன்னதாக 10 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், துணைநில் கடன் வசதி வீதத்தை இலங்கை மத்திய வங்கி 10 சதவீதமாக 100 அடிப்படை புள்ளிகளால் குறைத்துள்ளது
இதனை முன்னதாக இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை 11 சதவீதமாக நிர்ணயித்திருந்தது