உலகின் தலைசிறந்த உணவுகள் என்ற பட்டியலில் இந்திய உணவுகளுக்கு 5 ஆம் இடம் இடம் கிடைத்துள்ளது.
Taste atlas என்ற அமைப்பு உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பொதுமக்களிடம் சுவை மிகுந்த உணவுகள் குறித்து கருத்துகளை கேட்டு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் 4.72 புள்ளிகளுடன் இத்தாலிய உணவுகளுக்கு முதலிடமும், கிரீஸ், ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன. 4.54 புள்ளிகளுடன் இந்தியாவுக்கு 5ஆவது இடம் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
இந்திய உணவுகளில் பட்டர் கார்லிக் நான், கீமா, மலாய் மற்றும் கரம் மசாலா கலந்த உணவுகள் சிறந்தவை என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.