நுவரெலியாமலையகம்

அக்கரபத்தனை பகுதியில் மண் மேடு இடிந்ததில் இரண்டு வீடுகளுக்கு சேதம்

நுவரெலியாமாவட்டம் அக்கரபத்தனை அல்டோரி பிரிவில் மண் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் இரண்டு வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் முதல் தொடர்ந்து பெய்து வரும் அடை மழைக் காரணமாக குறித்த மண் அணைக்கட்டு உடைந்து வீழ்ந்ததிலேயே குறித்த இரண்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்களும் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்தும் அக்கரப்பத்தனை பிரதேசத்தில் மழை பெய்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

Related Articles

28 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button