பலாங்கொடை பின்னவள தோரவலகந்த பிரதான வீதியில்
வலேபொட தோரவலகந்த பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்திற்கு வீதியில் ஆணி வைத்ததால் பேருந்தை இடைநிறுத்திய சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் பாரிய அசௌகரியங்களை சந்தித்துள்ளனர். குறித்த பேருந்து காலை 5.30 மணிக்கு குறித்த பிரதேசத்தின் ஊடாக வருவதால் அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், தனியார் ஊழியர்கள் என்று பலரும் இந்த பேருந்தில் பயணிப்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை
பின்னவள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.