கொழும்பு – ஹட்டன் பிரதான வீதி தியகல பகுதியில் முற்றாக தடைப்பட்டுள்ளது.
வீதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் வீதி இவ்வாறு முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.