17 வயதுடைய சிறுமி தூக்கிட்டு தற்கொலை : சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்

பொகவந்தலாவ குயினா மேற்பிரிவு தோட்டப்பகுதியில் 17 வயதுடைய சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சிறுமி தனது வீட்டிலிருந்து பொகவந்தலாவ நகரப்பகுதிக்கு தொழில் நிமிர்த்தம் செல்வதாக கூறி மீண்டும்
வீடு திரும்பிய சிறுமி வீட்டில் எவரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து தனது தாய் தன்னை ஏசியமையாலேயே தான் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்வதாக குறித்த சிறுமி கடிதம் ஒன்றையும் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது..
சடலமாக சிறுமி 17வயதுடைய பரமநாதன் நித்தியா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது
மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.