செய்திகள்

17 வயது இளைஞன் கொலை சம்பவம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை..

17 வயது இளைஞன் ஒருவரை கூரான ஆயுதத்தால் குத்தி கொலை செய்த இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க குற்றவாளிகளுக்கு இன்று மரண தண்டனையை விதித்து தீர்பளித்துள்ளார்.

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றது.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு குற்றவாளி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் அவரை காணும் இடத்தில் கைது செய்வதற்கான பிடியாணையையும் நீதிபதி பிறப்பித்துள்ளார்.

Related Articles

Back to top button