வடமாகாணம் – மன்னார் மாவட்டம் – மடுபிரதேசம், பெரிய பண்டிவிரிச்சான் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் சமாதான திருக்கோயில்
மதிதந்து மாண்புடனே வாழச் செய்யும் விநாயகரே
மாநிலத்தில் நிம்மதியை நிறுவிடுவாய் அருள்மதியே
தலைதாழா நிலைதந்து முன்செல்ல வழியமைப்பாய்
பெரிய பண்டிவிரிச்சான் உறை எங்கள் சித்தி விநாயகரே
துணிவுதந்து துடிப்புடனே வாழச் செய்யும் விநாயகரே
துன்பமின்றி நிம்மதியை அருளிடுவாய் அருள்மதியே
தொல்லையில்லா நிலைதந்து முன்செல்ல வழியமைப்பாய்
பெரிய பண்டிவிரிச்சான் உறை எங்கள் சித்தி விநாயகரே
ஆற்றல் தந்து அச்சமின்றி வாழச்செய்யும் விநாயகரே
மகிழ்ச்சி தந்து நிம்மதியை நிறுவிடுவாய் அருள்மதியே
கவலையற்ற நிலைதந்து முன்செல்ல வழியமைப்பாய்
பெரிய பண்டிவிரிச்சான் உறை எங்கள் சித்தி விநாயகரே
இன்பநிலை தந்தெம்மை வாழச்செய்யும் விநாயகரே
இயல்பு நிலை தந்து நிம்மதியை நிறுவிடுவாய் அருள்மதியே
இறுக்கமற்ற மனநிலை தந்து முன்செல்ல வழியமைப்பாய்
பெரிய பண்டிவிரிச்சான் உறை எங்கள் சித்தி விநாயகரே
வெற்றிகள் அருளியென்றும் வாழச்செய்யும் விநாயகரே
வேதனைகள் அகற்றி நிம்மதியை நிறுவிடுவாய் அருள்மதியே
வற்றாத கருணை தந்து முன்செல்ல வழியமைப்பாய்
பெரிய பண்டிவிரிச்சான் உறை எங்கள் சித்தி விநாயகரே
நம்பிக்கை தந்தெம்மை வாழச்செய்யும் விநாயகரே
தீமைகளைப் போக்கி நிம்மதியை நிறுவிவிடுவாய் அருள்மதியே
தூயமனம் தந்து முன்செல்ல வழியமைப்பாய்
பெரிய பண்டிவிரிச்சான் உறை எங்கள் சித்தி விநாயகரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.