அஞ்சல் சேவை ஊடாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர் ஒருவர் காவல்துறை விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் அநுராதபுரம் – ரம்பேவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மருத்துவ பீடத்தில் மூன்றாம் ஆண்டில் பயிலும் குறித்த மாணவரிடம் இருந்து 11 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.