மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருட மலையக பூர்த்தியை முன்னிட்டு மலையகத்தின் பல பாகங்களிலும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மலையக வாழ் மக்களின் உரிமைகள் தொடர்பான நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெறுவதையும் மலையகம் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியையும் நாம் மீட்டி பார்ப்பது காலத்தின் கட்டாயம் ஆகும்” இந்த உலகத்தை மாற்றுவதற்கு எம்மால் பயன்படுத்த கூடிய ஆயுதம் கல்வி நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ச்சியாக போராடும் போராட்டமே பிற் காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது மனிதனாக பிறந்த எவரும் வீனாக அழித்துவிடக் கூடாது என்பதற்கேற்ப இன்று மலையகத்தில் கல்வியால் பலரும் சாதித்து வருவதுடன், உயர் பதவிகளையும் வகித்து வருகின்றமை மலையக மண்ணிற்கு கிடைத்த மகத்தான வெற்றி எனலாம்.
அந்த வகையில் ஸ்ரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரியிலே உப பீடாதிபதியாக கடைமையாற்றி அன்மையில் கொட்டக்கலை அரசினர் ஆசிரியர் கலாசாலையின் புதிய அதிபராக கடைமை பொறுப்பினை ஏற்ற திரு ஆர். லோகேஸ்வரன் ஐயா அவர்கள் அதேபோல கடந்த நாட்களில் ஸ்ரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக கடைமையேற்ற திருமதி பவானி லோகேஸ்வரன் அவர்களையும், அன்மையில் கலாநிதி பட்டம் பெற்ற ஸ்ரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் திரு கிருஷ்ணகுமார் அவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் இக் கல்லூரிகளின் மூலம் பயிற்ற படுகிற வாண்மை நிறைந்த ஆசிரியர்களை உருவாக்கி மலையகத்தின் புதிய திருப்புமுனையாக கல்வியில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தவும் முதல் தரம் வாய்ந்த எதிர்கால சந்ததியினரை கல்வியின் மூலம் நிலைநாட்ட மலையகம்.lk ஊடகத்தின் சார்பாக வாழ்துவதோடு மலையகத்தின் இருப்பையும், உயிர்ப்பையும் கல்வியின் மூலம் நிலைநாட்டி புதிய மாற்றங்களையும் சேவைகளையும் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பதிவு S.N.NAVEEN