இந்தியாவில் இடம்பெற்ற ஐந்தாவது ஆசிய சிலம்பம் போட்டியில் பங்கு பற்றி ஆறு வெள்ளிப் பதக்கங்களோடு இன்று தன் சொந்த மண்ணிற்கு வருகை தந்த
யோகநாயகம் குலேந்திரன், குலேந்திரன் சஸ்வின் ஆகியோரை
வரவேற்பு செய்து கௌரவிக்கும் நிகழ்வு நோனாத் தோட்டப் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வீரர்களுடைய பெற்றோரும் , முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்த வெற்றிக்கு இவர்களை தயார் செய்து இந்தியா வரை அழைத்துச் சென்று அ வர்கள் கூடவே இருந்து ஒத்துழைப்பும் பயிற்சியும் வழங்கிய அகில இலங்கை சிலம்பக் கலை சம்மேளனத்தின் தலைவர் திருச்செல்வம் (வெள்ளையன்) அவர்களுக்கும் தோட்டப் பொதுமக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்தனர்.