...
உலகம்

18 மாதங்களுக்குப் பிறகு முதன் முறையாக அடுத்த வாரம் முதல் தனது எல்லைகளை மீண்டும் திறக்க அவுஸ்திரேலியா தயாராகி வருகிறது.

18 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக அடுத்த வாரம் முதல் தனது எல்லைகளை மீண்டும் திறக்க அவுஸ்திரேலியா தயாராகி வருகிறது.

இந் நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகளுக்கான கொவிட்-19 தொடர்பான பயண ஆலோசனையையும் அவுஸ்திரேலியா வியாழக்கிழமை தளர்த்தியுள்ளது.

கொவிட்-19 தடுப்பூசி திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து, நவம்பர் 1-ஆம் திகதி முதல் முழுத் தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்களுக்கான வெளியூர் பயணத் தடையை அவுஸ்திரேலியா நீக்குகிறது.

ஏனெனில் அதன் பெரிய நகரங்களான சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகியவை தனிமைப்படுத்தலின்றி வெளிநாட்டுப் பயணிகளின் உள் நுழைவுக்கு அனுமதி வழங்கியுள்ளன.

கொவிட்-19 பயணக் கட்டுப்பாடுகளை அவுஸ்திரேலியா எளிதாக்கத் தொடங்குகையில், விக்டோரியா வியாழனன்று டெல்டா வெடிப்பின் மிக மோசமான 25 இறப்புகள் மற்றும் 1,923 தொற்றுகளை பதிவு செய்தது.

இது கடந்த நான்கு நாட்களில் தொற்றுநோய்களின் மிகப்பெரிய அதிகரிப்பு ஆகும். 

சிட்னியின் தாயகமான நியூ சவுத் வேல்ஸில் வியாழனன்று 293 புதிய தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen