செய்திகள்

18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி

18 வயதுக்கு குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசியினை செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்

கொழும்பில் நேற்று (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசிகளை செலுத்துமாறு கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில், சுகாதாரத்துறையின் விசேட நிபுணர்களுடன் இணைந்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, ஜப்பானில் நன்கொடையளிக்கப்படவுள்ள 14 இலட்சத்து 70 ஆயிரம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் அடுத்தவாரமளவில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button