இம்மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை சுற்றுப்பயணத்தின் போது, ஆதரவாளர்கள் தங்கள் அணியின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாக அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்வெப்சன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பதாக, இலங்கையின் நிலைமை குறித்து மீளாய்வு செய்வதற்கு பல கூட்டங்கள் நடத்தப்பட்ட பின்னரே, போட்டியை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளனர்.
இலங்கையில் அரசியல் ரீதியாக நடக்கும் சில விஷயங்களை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், இது பாகிஸ்தானில் நடப்பதைப் போன்றது. அங்கு என்ன நடக்கின்றது என்பதைப் பற்றி எமது பாதுகாப்புக் குழுவினர் வாரந்தோறும் எங்களுக்கு தகவல்களை அறியத்தருவார்கள். நாம் அங்கு பாதுகாப்பாக இருப்போம் என்று அவர்கள் எமக்கு உறுதியளித்துள்ளனர். அதனால் தான் கிரிக்கெட் போட்டியில் முழு கவனம் செலுத்தி வருகிறோம் என்று உறுதி அளித்துள்ளதாக மிட்செல் ஸ்வெப்சன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.