இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்இ சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.
அதன்படிஇ இன்று நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பின் முடிவுகளுக்கமையஇ நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் 186 வாக்குகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் 137 வாக்குகளையும் பெற்றுக்கொண்டதாக கட்சி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
அதன்படிஇ 49 வாக்குகளை மேலதிகமாக பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவாகியுள்ளதாக அந்த கட்சியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.