மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.22.01.2024.
மஸ்கெலியா நகரிலிருந்து காட்மோர் செல்லும் பிரதான வீதியில் டீசைட் சந்தியில் இருந்து காட்மோர் வரையான 06 கிலோமீற்றர் பகுதியில் சுமார் 04 கிலோமீற்றர் தூரம் பல வருடங்களாக மிகவும் குன்றும் குழியுமாக காணப்படுவதால் தோட்டத் தொழிலாளர் சமூகம், பாடசாலை மாணவர்கள் வயோதிபர் கள் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் வாகன சாரதிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இது குறித்து மத்திய மாகாண நெடுஞ்சாலைத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இந்த வீதியில் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து ஒன்றுடன் 06 தனியார் பயணிகள் போக்குவரத்துப் பேருந்துகள் நாளாந்தம் இயங்குகின்றன.
காட்மோர், ஃபோக்மோர், மொக்கா மற்றும் டீசைட் ஆகிய பிரதான 4 தேயிலைத் தோட்டங்களில் உள்ள 12 பிரிவில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் கிட்டத்தட்ட 6,000 மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த வீதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் காட்மோர் தமிழ் வித்தியாலயம் எடமஸ்பீக் தமிழ் வித்தியாலயம் மொக்கா தமிழ் வித்தியாலயம் டீசைட் தமிழ் வித்தியாலயம் மொக்கா தமிழ் வித்தியாலயம் கீழ் பிரிவு ஜந்து பாடசாலைக்கு செல்லும் ஆசிரியர்கள் காட்மோர் வழித்தடத்தில் தினமும் ஏராளமான கனரக சரக்கு வாகனங்கள் இந்த வீதீயூடாக சென்று வருகின்றன.மவுஸ்சாக்கலை நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர் வழங்கும் காட்மோர் ஓயா மற்றும் முரே ஓயா ஆகிய இரு பிரதான நீர்வீழ்ச்சிகளை பார்வையிட தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்த குன்றும் குழியுமாக உள்ள வீதியின் ஊடாக பேருந்கள், முச்சக்கர வண்டிகள் மோட்டார் சைக்கிளில் மற்றும் வேன்களில் பயணிக்கின்றனர்.
காட்மோரில் இருந்து மஸ்கெலியா நகருக்கு சுமார் 15 கிலோமீட்டர் தூரம் உள்ளது. காட்மோர் பிரதேசத்திலிருந்து மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை வரை இந்த பாழடைந்த வீதியூன் ஊடாக கர்ப்பிணிப் பெண்களும் ஆபத்தான நோயாளர்களும் மிகவும் துரதிஷ்டவசமாக உயிரிழக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பிரதேச சாரதிகளும் தோட்டத் தொழிலாளர் சமூகமும் தெரிவிக்கின்றனர். சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் உரிய நேரத்தில் பேருந்துகளை இயக்க முடியாமல் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக பேருந்து சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த தேர்தல் காலங்களில் சாலையை சீரமைக்கும் பணிக்காக மெட்டல், மணல் கொண்டு வந்து சாலையின் இருபுறமும் குவித்து வைக்கப்பட்டு, மெட்டல், மணல் அள்ளியதாக அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.
தேர்தலுக்குப் பிறகு எந்த வளர்ச்சியும் இல்லாமல் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
பழுதடைந்த காட்மோர் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.