விளையாட்டு

19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ணத்தில் ஜப்பானும் நைஜீரியாவும்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை 19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது.

அடுத்த வருடம் இந்த தொடர் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ளது.

அடுத்த வருடம் 17 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

தொடருக்கான ஏ குழுவில் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, ஜப்பான் ஆகிய அணிகள் விளையாடவுள்ளன.

பி குழுவில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியதீவுகள் , நைஜீரியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

சி குழுவில் பாகிஸ்தான் பங்களாதேஷ் சிம்பாப்வே, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கனடா ஆகிய அணிகள் டி குழுவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன

ஜப்பானும் நைஜீரியாவும் இந்த தொடரில் முதல்தடவையாக விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download