க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவ, மாணவிகளுக்கான தமிழ் மொழி பாடத்திற்கான பரீட்சை வினாத்தாள் மீட்டலும், கருத்தரங்கும்.
19.12.2022 நேற்றைய தினம் நாவலப்பிட்டிய கதிரேசன் மத்திய கல்லூரியில் ACT Canada பூரண அனுசரணையுடன், ACT Sri Lanka வழிகாட்டலில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மாணவ, மாணவிகளுக்கான கருத்தரங்கு இடம்பெற்றது.
இக்கருத்தரங்கினை ACT Sri Lanka உப தலைவர்/ ஆலோசகர் திரு. இரா. சிவயோகன், ACT Sri Lanka ஊடகத்துறை தலைமை நிர்வாகி செல்வி ப.பவித்ரா மற்றும் ஆசிரியை செல்வி. கிருஷாந்தினி, திருமதி. மதிவதனா ஆகியோரினால் மங்கள விளக்கேற்றலுடன் கருத்தரங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வளவாளர்களாக செந்தில் குமரன், திருமதி. மதிவதனா ஆகியோரினால் முன்னெடுத்து செல்லப்பட்டமை குறிப்பிடதக்க விடயமாகும்.
குறித்த கருத்தரங்கினை செல்வி. ராதிகா, செல்வி. சுலோச்சனா, செல்வி. கிருஷாந்தினி ஆகியோரினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.