அவுஸ்ரேலிய பெண் ஒருவரை கம்பளை வெலம்பொட பகுதியில் துஷ்பிரயோகம் செய்ததாக நுவரெலியா சுற்றுலா பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்று பதிவு செய்துள்ளனர்,
அவுஸ்ரேலியா நாட்டை சேர்ந்த இரு பிள்ளைகளுடன் கணவரும் கடந்த 2024.02.06 திகதி அன்று கம்பளை வெலம்பொடை வலகெதர பிரதேசத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றுக்கு தங்குவதற்கு வந்துள்ளனர்.
இதன் போது அவுஸ்ரேலியா நாட்டை சேர்ந்த ஜீலியா மாலி ஒல்மன் என்ற பெண் அந்த விடுதி உரிமையாளரிடம் மசாஜ் செய்பவர்கள் ஒருவர் பெற்று தருமாறு கூறிய பின் அந்த ஊரிமையாளர் online மூலமாக வாதுவ பகுதியில் இருந்து நபர் ஒருவரை அழைத்துள்ளார்,
அதன் பின் அந்த நபர் அவுஸ்ரேலியா பெண்ணுக்கு மசாஜ் செய்துள்ளார்.
அதன் பிறகு 9ம் திகதி நுவரெலியா எல்ல பகுதிக்கு சுற்றுலா பார்க்கச் சென்று மீண்டும் நுவரெலியா நகருக்கு 10ம் திகதி வந்து நுவரெலியா tories பொலீஸ் நிலையத்தில் மசாஜ் செய்த நபர் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு பதிவு செய்துள்ளார்
இதனைத் தொடர்ந்து நுவரெலியா பொலிஸார் கம்பளை வெலம்பொட பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதை அடுத்து வெலம்பொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு இன்று மசாஜ் செய்த நபரின் தொலைபேசி இலக்கத்தை அடையாளம் கண்டு அவருக்கு அழைப்பு ஏற்படுத்தி பொலிஸ் நிலையத்திற்க்கு வரவழைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கம்பளை வெலம்பொட பொலிஸார் சந்தேக நபரை இன்று மதியம் கைது செய்து நாளை நீதிமன்றத்தின் ஆஜர் செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.