நானுஓயா நிருபர்
நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த பஸ் விபத்து – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில்
கொழும்பு -ஹொரணையில் இருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில் கொழும்பு ஹொரண பகுதியிலிருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றவர்கள் மூன்று நாட்கள் பின்னர் மீண்டும் கொழும்பு – ஹொரணையை நோக்கி சென்று கொண்டிருந்த போது, ரதல்ல குறுக்கு வீதியில் அபாயகரமான வளைவில் பேருந்தில் ஏற்பட்ட
இயந்திர கோளாறு காரணமாக பேருந்து சாரதிக்கு வேக கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் சுமார் 30 அடிஇழுத்துச் சென்று மரத்தில் மோதுண்டே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பேருந்து முன் பகுதியானது பலத்த சேதமடைந்துள்ளதாகவும் மற்றபடி பேருந்தில் இருந்த 47 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன .