எதிர்வரும் 10ம் திகதி மலையக தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு.
மலையக தியாகிகள் தினமானது எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை (10.01.2023) பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு கொட்டக்கலை கொமர்சல் லேக்கில் பிற்பகல் 03.00 மணிக்கு இடம்பெறும் என மலையக சிவில் அமைப்புகள் அறிவித்துள்ளன.
மலையகத் தமிழர்களுக்கான தொழில்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமைப்போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் நிகழ்வின் ஏனைய அம்சங்கள் நடைபெறும்.
1930 இற்கு பிற்பட்ட காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க அரசியல் உரிமைப் போராட்டங்களில் பங்குபற்றி உயிர்நீத்த அனைத்து தோட்டத்தொழிலாளர்களையும் மலையக தியாகிகள் என அடையாளம் காண்கின்றோம்.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொண்டு எமக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்தவர்களை நினைவு கூர அனைவரும் வருகை தர வேண்டும் என்று பிடிதளராதே அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ரா.கவிஷான்.