கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம், திருகோணமலை, அருள்மிகு திருக்கோணேச நாதர் திருக்கோயில்
அருள் தந்து ஆற்றல் தந்து ஆதரிக்கும் சிவனே
அல்லல் களைந்தெம்மை வாழவைக்க வருவாய்
கருணை மிகு உன்னருளே எமக்கென்றும் காப்பு
கோணமாமலை யமர்ந்த எங்கள் பெருமானே
அச்சமில்லா நிம்மதியை அளிக்கின்ற சிவனே
அனைத்து நலன் தந்தெம்மை வாழ வைக்க வருவாய்
அன்புருவே உன்னருளே எமக்கென்றும் காப்பு
கோணமாமலை யமர்ந்த எங்கள் பெருமானே
பெருங்கடலின் அருகிருந்து அருளுகின்ற சிவனே
பெருநோய்கள் தடுத்தெம்மை வாழவைக்க வருவாய்
பெருமைமிகு உன்னருளே எமக்கென்றும் காப்பு
கோணமாமலை யமர்ந்த எங்கள் பெருமானே
சம்பந்தரால் பாடல் பெற்றபதி அமர்ந்த சிவனே
சச்சரவுகள் தடுத்தெம்மை வாழவைக்க வருவாய்
சீரிய வாழ்வுக்கு உன்னருளே எமக்கென்றும் காப்பு
கோணமாமலை யமர்ந்த எங்கள் பெருமானே
இராவணேசன் பூசையிலே பெருமை பெற்ற சிவனே
இடர்கள் அண்டாது தடுத்தெம்மை வாழவைக்க வருவாய்
இன்றும் என்றும் உன்னருளே எமக்கென்றும் காப்பு
கோணமாமலை யமர்ந்த எங்கள் பெருமானே
குன்றின் உச்சியிலே கோயில் கொண்ட சிவனே
குறைகள் தடுத்தெம்மை வாழவைக்க வருவாய்
எம்குலம் மிளிர உன்னருளே எமக்கென்றும் காப்பு
கோணமாமலை யமர்ந்த எங்கள் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.