தமிழ்ச்செல்வன் ஊடாக பசறை கல்போக் ஸ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப்பாடசாலையின் 50 மாணவர்களுக்கு இன்றைய தினம் அப்பியாசப் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைக்குமாறு பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் அவர்களின் பணிப்புரைக்கு அமைய தமிழ்செல்வனின் சொந்த நிதியினால் இன்றைய தினம் கல்போக் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸின் இணைப்புச் செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் காரியாலய உத்தியோகத்தர்களும் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ராமு தனராஜா