விளையாட்டு

2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ஓட்டங்களால் வெற்றி.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளுக்;கும் இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையடைந்துள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா தமது முதல் இனிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 329 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் ரோஹித் சர்மா 161 ஓட்டங்களை பெற்ற நிலையில் இங்கிலாந்தின் பந்து வீச்சில் மொஹின் அலி 4 விக்கெட்டுக்களையும், ஓலி ஸ்டோன் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தமது முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து சகல விக்கெட்டுக்களையும் இழந்து 134 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்தின் துடுப்பாட்டத்தில் பென் போக்ஸ் ஆட்டமிழக்காமல் அதிகூடிய 42 ஓட்டங்களை பெற்றதுடன், இந்தியாவின் பந்து வீச்சில் ரவிசந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து தமது இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்தியா ரவிச் சந்திரன் அஸ்வின் பெற்ற 106 ஓட்டங்கள் உதவியுடன் 286 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இங்கிலாந்தின் பந்து வீச்சில் லீச் மற்றும் மொஹின் அலி ஆகியோர் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 482 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து போட்டியின் நான்காம் நாளான இன்று வரை போராடி சகல விக்கெட்டுக்களையும் பறிக்கொடுத்து 164 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 317 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக தமிழக வீரர் ஆர்.அஸ்வின் தெரிவானார்.

இதன்படி உலக டெஸ்ட் சம்பியன்சிப் புள்ளி பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், இங்கிலாந்து 4 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி அகதபாத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், 4 ஆவது டெஸ்ட் போட்டியும் அகதபாத்தில் மார்ச் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related Articles

Back to top button