சமூகம்செய்திகள்

2018 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சிகரெட்டுகள் அழிப்பு..

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி நாட்டுக்கு சட்ட விரோதமாகக் கொண்டு வரப்பட்ட சிகரட்டுக்கள் இலங்கை சுங்க திணைக்களத்தின் விசாரணைப்பிரிவினால் அழிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 26 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 5200 சிகரெட்டுகள் காணப்பட்டதாகவும்,இவை 40 அடி கொள்கலன்கள் மூலம் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 4 வகையான சிகரெட்டுகளின் மொத்த எடை 1,650 கிலோ கிராம் என கணக்கிடப்பட்டுள்ளது.

இவற்றின் மொத்த தொகை 61,092,510 ரூபா என்று சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button